நீலகிரி மாவட்டம், உதகை மழை நீரில் சிக்கிக்கொண்ட சுற்றுலாப்பயணிகளை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
உதகையில் அதி கனமழை பெய்து வரும் நிலையில், மத்திய பேருந்து நிலையம், காந்தல், பிங்கர் போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியுது. அதேபோல் படகு இல்லம் செல்லும் சாலையில் தேங்கிய தண்ணீரில் சுற்றுலாப்பயணிகளுடன் வந்த கார் ஒன்று சிக்கிக்கொண்டது. பின்னர் தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுற்றுலாப்பயணிகளையும், காரையும் பத்திரமாக மீட்டனர்.