திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
திருச்சி உறையூரில் பிரசித்தி பெற்ற பஞ்சவர்ண சுவாமி திருக்கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில், அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் காந்திமதி அம்மை உடனுறை பஞ்சவர்ண சுவாமி சமேதராக எழுந்தருளினார். பக்தர்கள் திருத்தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்று வழிபட்டனர்.