காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கருட சேவை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து ஒவ்வொரு நாட்களும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட நிலையில் வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளினார்.
இதையடுத்து திருக்குடையுடன் சுவாமியின் கருட சேவை நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்
இதே போல், சென்னை திருவொற்றியூரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் கருட சேவை நடத்தப்பட்டது. இக்கோயிலில் மேளதாளங்கள் முழுங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி ஆலய வளாகத்தில் வலம் வந்தார்.
அப்போது சுவாமி பல்லக்கு லேசாக சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சுவாமிக்கு தீபராதணை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன் பெருமாளை தரிசனம் செய்தனர்.