சென்னையின் 4 மண்டலங்கள் மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளை மறுதினம் முதல் வரும் 2-ம் தேதி வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்படும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதற்கு முன்னதாக நெம்மேலியில் அமைந்துள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன் காரணமாக, சென்னையில், தேனாம்பேட்டை, அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களிலும், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும், நாளை மறுநாள் முதல் வரும் 2-ம் தேதி வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்படும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டுமெனவும் சென்னை குடிநீர் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. , குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம்
குறைவான பகுதிகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம், எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.