சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவனை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா கடந்தாண்டு மே 28ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஓராண்டு பணியாற்றிய கங்காபூர்வாலா நாளை பணி ஓய்வு பெறுகிறார்.
இதனிடையே, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவனை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். எஸ்.வி. கங்காபூர்வால நாளை ஓய்வு பெற உள்ள நிலையில் மூத்த நீதிபதியான மகாதேவனை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளை மறுநாள் முதல் அவர் பணிகளை கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.