நாட்டில் நெருக்கடி நிலையைக் கொண்டுவந்து ஜனநாயகத்தை திணறடித்தவர் இந்திரா காந்தி என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பாஜக 400 இடங்களில் வென்றால், ஜனநாயகத்துக்கு ஆபத்து என காங்கிரஸ் தெரிவித்த கருத்துக்கு ராஜ்நாத் சிங் இவ்வாறு பதிலடி கொடுத்தார். ஹரியானாவின் கர்னல் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், 1975-ஆம் ஆண்டுக்கு முன் தேர்தலில் தோல்வியடைந்த இந்திரா காந்தி, தார்மீக பொறுப்பேற்று பதவி விலகியிருக்க வேண்டும் என்றும், ஆனால் அவ்வாறு செய்யாமல், நெருக்கடி நிலையைக் கொண்டுவந்து ஜனநாயகத்தையே திணறடித்ததாகவும் குற்றம்சாட்டினார்.