சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் குறைந்து 54 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கம் இன்று 880 ரூபாய் குறைந்துள்ளது.
அதன்படி ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 54 ஆயிரம் ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 110 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 750 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை 3 ரூபாய் 30 காசுகள் குறைந்து 97 ரூபாய்க்கு விற்பனையாகிறது.