சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.
உச்சநீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு கடந்த 2023 ஏப்ரல் 19-ம் தேதி மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.வி.கங்காபூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரையை ஏற்ற குடியரசுத் தலைவர், கங்காபூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மே 28-ம் தேதி தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா பதவி எற்றுக் கொண்டார்.
அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கிட்டத்தட்ட ஓராண்டு பணியாற்றிய கங்காபூர்வாலா இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.
இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.