கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு இயக்கப்படும் மலை ரயில் பாதையில் கடந்த 18-ம் தேதி மண் சரிவு ஏற்பட்டது, இதையடுத்து 4 நாட்கள் கழித்து மீண்டும் ரயில் சேவை இயக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் பெய்த கனமழை காரணமாக ஹில்கிரோ – ஆர்டர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பாதையில் 5 இடங்களில் தொடர்ச்சியாக மண் சரிவு ஏற்பட்டது. இதனை சீரமைக்க வேண்டி மலை ரயில் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.