ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே மாடு மேய்க்க சென்றவர் காட்டு யானை தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெஜிலட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாதன், மாடு மேய்ப்பாளரான இவர் வழக்கம் போல மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.
வெகு நேரமாகியும் வீடு திரும்பாத இவரை அப்பகுதியினர் தேடி சென்றனர். அப்போது மாதன் கொம்புதூக்கி அம்மன் கோயில் அருகே யானை தாக்கி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு கூராய்விற்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.