ஓபிசி ஒதுக்கீட்டின் கீழ் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு ரத்து தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்க தக்கது என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராகுல் காந்தி மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் எவ்வாறு அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்பட்டு வந்துள்ளனர் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தர்ம அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட மாட்டாது என அரசியல் சாசனத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்ற தீர்ப்பில் தனக்கு உடன்பாடு இல்லை என்று மம்தா பானர்ஜி கூறுவது ஏற்புடையது அல்ல என்றும், சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் யாரும் கிடையாது என்றும் நட்டா தெரிவித்துள்ளார்.