ஆன்மீகத்தின் நம்பிக்கை இல்லாமல் திமுக அரசு கோயிலை நிர்வகிக்கக் கூடாது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் மேலூரில் திருமணங்கீஸ்வரர் திருவுடையம்மன் ஆலயத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 25 கோடி பேர் வறுமை நிலையில் இருந்து மேன்மைக்கு வந்துள்ளதாக தெரவித்தார்.
தமிழக மீன்வளத்துறைக்கு ஆயிரத்து 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும், பழவேற்காடு முகத்துவாரம் இதுவரை சீரமைக்கப்படவில்லை என குற்றச்சாட்டினார்.
மேலூர் கோயில் ராஜகோபுரம் மற்றும் சீரமைப்பு பணிகளை கடந்த 6 மாதங்களாக கிடப்பில் போட்டுள்ள திமுக அரசு, கோயிலை விட்டு வெளியேற வேண்டும் என்பது மக்களின் எண்ணமாக உள்ளதாக எல்.முருகன் கூறியுள்ளார்.