நெல்லையில் உள்ள தோரணமலை முருகன் கோயிலில் நடைபெற்ற பௌர்ணமி கிரிவலத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கடையம் அருகேயுள்ள தோரணமலை முருகன் கோவிலில் மாதாமாதம் கிரிவலம் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் நடைபெற்ற வைகாசி விசாகம் பௌர்ணமி கிரிவலத்தில் கொட்டும் மழையில் பக்தர்கள் குடை பிடித்தவாறு கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.