சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை ஒரே நாளில் 800 ரூபாய் குறைந்துள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படும் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 880 ரூபாய் குறைந்தது.
இதனைத் தொடர்ந்து, 2-வது நாளாக ஆபரணத் தங்கம், சவரனுக்கு 800 ரூபாய் குறைந்துள்ளது.
ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரத்து 220 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 6 ஆயிரத்து 650 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
2 நாட்களில் ஆபணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 680 ரூபாய் குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் குறைந்து 96 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது.