டெல்லி அலிப்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.