அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு - ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!
Aug 13, 2026, 07:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

Murugesan M by Murugesan M
Oct 4, 2025, 08:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் பயன்படுத்திய அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 போர் விமானங்கள் உள்பட 10 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தலைமை தளபதி ஏபி சிங் ரகசியத்தை உடைத்துள்ளார். பாகிஸ்தான் தோல்வியையும் விரிவாக எடுத்துரைத்துள்ளார். இதுதொடர்பான செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

இந்தியாவின் துணிச்சலான ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எதிர்க்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் மண்ணை கவ்வியது உலகமே அறிந்த விஷயம். போர் முனையில் இந்தியாவிடம் யுத்தத்தை நிறுத்துமாறு மண்டியிட்ட பாகிஸ்தான், ஏதோ இந்தியாவுக்கு பதிலடியெல்லாம் கொடுத்தது போன்று அவ்வப்போது அப்பட்டமாகப் பொய்யுரைத்து வருகிறது.

அண்மையில் நடந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் கூட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அவ்வாறே சைகை செய்தனர். ஆனால், இந்தியாவோ ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் வெற்றிக் கொடி நாட்டியதைப் போன்றே, மூன்று போட்டிகளில் பாகிஸ்தானை படுக்க வைத்துப் பாடம் புகட்டியது. அக்டோபர் 8ம் தேதி இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், ஹின்டன் விமானப்படை தளத்தில் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற உள்ளது.

இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார் விமானப்படை தலைமை ஏர் மார்ஷல் அமர்பிரித் சிங். ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை இந்தியா பந்தாடிய விதத்தை விவரித்த அவர், இது பாகிஸ்தானுக்கு பெரும் இழப்பு என்று கூறினார். போர் முனையில் பாகிஸ்தானின் 10 போர் விமானங்கள் தாக்கி அழிக்கப்பட்டதாகப் புதிய தகவல்களையும் வெளியிட்டு ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.

குறிப்பாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கிய F-16 ரக போர் விமானங்கள், சீனா வழங்கிய JF -17 ரக போர் விமானங்கள் ஆப்ரேஷன் சிந்தூரின்போது அழிக்கப்பட்டதை உறுதி செய்துள்ளார். அதுமட்டுமின்றி கண்காணிப்பு விமானம் ஒன்று, பராமரிப்புக்காகத் தரையில் நிறுத்தி வைக்கப்பட்ட 4 முதல் 5 போர் விமானங்களும்வீழ்த்தப்பட்டதாகக் கூறியுள்ளார்.

போர் முனையில், நான்கு இடங்களில் உள்ள ரேடார்கள், இரண்டு இடங்களில் உள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், இரண்டு ஓடுபாதைகள், மூன்று ஹேங்கர்கள், தரையில் இருந்து ஏவுகணையை அனுப்பும் தளம் உள்ளிட்டவையும் தாக்குதலில் இரையானதாக அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் 300 கிலோ மீட்டர் ஊடுருவிச் சென்று பயங்கரவாத முகாம்களைத் தாக்கி அழித்ததாகவும், இந்திய விமானப்படை வரலாற்றில் அதிக தூரம் சென்று தாக்குதல் நடத்தியது சிறப்பான தருணம் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

பாகிஸ்தானுக்கு இது உளவியல் ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், போர் நிறுத்தத்தை நோக்கித் தள்ளப்பட்டார்கள் என்றும் விவரித்தார். இந்திய விமானங்களை அழித்ததாகப் பாகிஸ்தான் கூறுவது புனையப்பட்ட கதை என்றும், இந்தியாவின் 15 விமானங்களை சுட்டு வீழ்த்தியாக அவர்கள் நினைத்தால் நினைத்துவிட்டு போகட்டும் என்றும் தெரிவித்தார்.

நம் விமானப்படை தளத்தை அழித்தது, விமானங்களை வீழ்த்தியது தொடர்பாக ஏதேனும் ஒரு படத்தை பார்த்துள்ளீர்களா? ஆனால் பாகிஸ்தானின் இழப்புகளை உறுதி செய்யும் வகையிலான புகைப்படங்கள் நம்மிடம் ஏராளமாக உள்ளதாகவும் அவர் கூறாமல் இல்லை. சில நாள்களுக்கு முன், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் உரையாற்றியபோது, ​​பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ஏழு இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் படையால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறியிருந்ததார்.

பாகிஸ்தானின் கூற்றுக்கு இதுவரை எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை என்பது தனிக்கதை. எனினும் அவரது கூற்றை மறுக்கும் விதமாக ஏர் மார்ஷலின் பதில் அமைந்திருக்கிறது.

Tags: இந்திய விமானப்படை தலைமை தளபதி ஏபி சிங்Operation SindoorDestroying American F-16 and Chinese JF-17 aircraft - this is what happened in Operation Sindoorஅமெரிக்காவின் F-16சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு
Share
Tweet
SendShare
Previous Post

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

Next Post

ஆர்மீனியா வா? அல்பேனியா வா? – டிரம்பை கிண்டலடித்த ஐரோப்பிய தலைவர்கள்!

Related News

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளள ரஷ்ய விண்வெளி வீரர்கள் – இந்திய மக்களுக்கு தந்திர தின வாழ்த்து!

டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம்!

கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -100க்கும் மேற்பட்டோர் பலி!

அறங்காவலர் தேர்வு குழுவில் அர்ச்சனா கல்பாத்தி; தமிழக அரசு அறிவிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

பழனியில் மீண்டும் ஒரு பத்திரப்பதிவு மோசடி; ஜஸ்டின் மணிகண்டன் மீது மற்றொரு வழக்கு பதிவு

குறுக்கு வழிகளை கைவிடுங்கள்; இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

கொசுமருந்தை சுவாசித்து மூச்சுத்திணறல்; இருவர் உயிரிழப்பு

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies