சேலம் மேட்டூர் அணையிலிருந்து 2 ஆயிரத்து 100 கன அடி தண்ணீர் காவிரியில் வந்து கொண்டிருக்கிறது.
இதனால், முக்கொம்பு மேலணையில் இருந்து, கொள்ளிடம் ஆற்றில் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது.
எனவே, ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவே, ஆற்றின் வழியாக கரையை கடக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
மேலும், கொள்ளிடம் ஆற்றில் சலவைத் தொழிலாளர்கள் மற்றும் கரையோரம் வசிக்கும் மக்கள் தங்களது கால்நடைகளை ஆற்றில் மேய்ச்சலுக்கு விடவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.