உத்தர பிரதேசம் ஜான்சி நகரில் முதியவர் மீது கொகுசு காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜான்சியில் கேஸ் ஏஜெண்டாக பணியாற்றி வரும் முதியவர் வழக்கம்போல் அவர் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த சொகுசு காரை ஓட்டி வந்த நபர், வேண்டுமென்ற அவர் மீது ஏற்றியுள்ளார்.
முதியவரின் அபாயக் குரல் கேட்ட அப்பகுதி மக்கள், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சொகுசு காரின் ஓட்டுநரை போலீசார் கைது செய்த நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.