யூடியூப்பர் சவுக்கு சங்கரை போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்த வழக்கில், இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
பெண் போலீசார் உள்ளிட்டவர்களை ஆபாசமாக பேசிய புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
இந்நிலையில், குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால், குண்டர் சட்டம் தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்குமாறு நீதிபதி பாலாஜி உத்தரவிட்டார்.
இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால், வழக்கை 3-வது நீதிபதியின் விசாரணைக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
மேலும், சவுக்கு சங்கரை கோவை சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றவேண்டும் என இரு நீதிபதிகளும் உத்தரவிட்டனர்.