காலை 9 மணி நிலவரப்படி 6-ம் கட்ட மக்களவை தேர்தலில் 10. 82 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப். 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற்று வருகிறது.
இதுவரை 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், தற்போது வரை 428 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் 6ம் கட்டமாக 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.
இதில் முன்னாள் முதலமைச்சர்கள் மனோகர்லால் கட்டார், மெகபூபா முப்தி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் மேனகா காந்தி, தொழிலதிபர் நவீன் ஜிண்டால் உள்பட மொத்தம் 889 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 1 லட்சத்து 14 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 11 லட்சத்து 4 ஆயிரம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே 9 மணி நிலவரப்படி 10 புள்ளி 82 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.