தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணியினை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சிவ்தாஸ் மீனா, கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மழையை எதிர்கொள்ள சென்னை தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.
எதிர்பார்த்ததை விட அதிகமழை பெய்தால் மட்டுமே தண்ணீர் தேங்கக்கூடிய சூழல் உருவாகும் எனவும் அவர் கூறினார். மக்களுக்கு பாதிப்பு இருக்கக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை பணிகளை விரைந்து மேற்கொண்டு வருகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.