மின்சார கட்டண மோசடி SMS மீண்டும் உலா வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு மின்சார வாரியம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள குறிப்பில்,
இத்தகைய குருஞ்செய்தியை நம்பி மோசடிக் கும்பலின் வலையில் சிக்கி பலரும் தங்களது பணத்தை இழந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போல குறுஞ்செய்தி வந்தால் பதட்டம் அடைய வேண்டாம் எனவும் உங்கள் மின் கட்டணம் தொடர்புடைய விவரங்களை அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரி பார்க்கவும் எனவும் தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், தங்களுக்கு அனுப்பப்படும் எந்த ஒரு இணைய லிங்க்கையும் கிளிக் செய்ய வேண்டாம் என்ற எச்சரிக்கையையும் தமிழ்நாடு மின்சார வாரியம் விடுத்துள்ளது.
மேலும் 1930 என்கிற இலவச புகார் எண்ணை தொடர்புகொண்டு மின்சார கட்டண மோசடி குறித்து புகார் அளிக்கவும் மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.