குரூப் 2 மற்றும் குரூப் 2A பணிகளுக்கான முதன்மைத் தேர்வின் புதிய பாடத்திட்டங்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படுகின்றன. ஆண்டுத்தோறும் தேர்வு அட்டவணையை வெளியிடும் தேர்வாணையம், ஒரு சில மாற்றங்களையும் அவ்வப்போது செய்து வருகிறது.
அந்தவகையில் குரூப்-2, 2ஏ தேர்வுக்கு தனித்தனியே முதன்மை தேர்வுகள் நடத்தப்படும் என கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து குரூப்-2, 2ஏ முதன்மை எழுத்துத் தேர்வுக்கான மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.