மயிலாடுதுறை மாவட்டம், சோழம்பேட்டை பகுதியில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
சோழம்பேட்டையில் உள்ள மாவட்ட அரசு மாதிரிப்பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பங்கேற்று பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பொன்னாடை போத்தி கவுரவித்தார்.
பின்னர் பேசிய அவர் கிராம புற மாணவர்கள் சாதனை படைக்க பல்வேறு வகையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், பிள்ளைகளை பெற்றோர்கள் ஊக்குவித்து முன்னேற்றம் அடைய உதவ வேண்டுமென அறிவுரை வழங்கினார்.