அமெரிக்காவில் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளாக இந்தியர்கள் இருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை பூர்வீகமாக கொண்ட ஜெயா படிகா, கலிஃபோர்னியா மாகாணம், சேக்ரமெண்டோ மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர், இதற்கு முன் இதே நீதிமன்றத்தில் ஆணையராக பணியாற்றி வந்த நிலையில், நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இதேபோல, ஃபிரெஸ்னோ மாவட்ட நீதிபதியாக பஞ்சாபை சேர்ந்த ராஜ் சிங் பதேஷா நியமிக்கப்பட்டுள்ளார். இப்படி அமெரிக்காவில் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளாக இந்தியர்கள் இருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.