பூமியை போல தோற்றம் கொண்ட மற்றொரு கோளை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
சூரிய குடும்பத்துக்கு அருகே தண்ணீர் இருப்பதுடன், உயிர்கள் வாழும் சூழலும் காணப்படுவதால், இந்தப் புதிய கோளுக்கு சூப்பர் பூமி என பெயரிடப்பட்டிருக்கிறது.
புவியிலிருந்து 137 ஒலி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்தக் கோளானது, பூமியை விட ஒன்றரை மடங்கு பெரியதாகும்.
சூப்பர் பூமியிலும் சூரியனைப் போன்ற சிவப்பு நட்சத்திரம் ஒன்று காணப்படுவதாகவும், அது சற்று குளிரானதாகவும், அளவில் சிறியதாகவும் இருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.