நாகையில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ள திருச்சபையின் கட்டிடக்கலை பார்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பழமைவாய்ந்த தூய பேதுரு ஆலயம் டச்சு கட்டிடக்கலையை மையபடுத்தி சுமார் 250 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
இந்த ஆலயம், இயற்கை பேரிடர்களாலும், மழையாலும் சேதமடைந்த நிலையில், தற்போது சுமார் 75 லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
டச்சுகாரர்களின் கட்டடக்கலையை மீட்டெடுக்கும் விதமாக நடைபெறும் பணிகளை மக்கள் வியப்புடன் கண்டு செல்கின்றனர்.