புனே கார் விபத்து தொடர்பாக காரை ஓட்டிய சிறுவனின் தாத்தாவை போலீசார் கைது செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் 17 வயது சிறுவன் ஓட்டி சென்ற கார் மோதியதில் ஐடி ஊழியர் இருவர் உயிரிழந்தனர்.
காரை ஓட்டிச்சென்றபோது சிறுவன் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த சிறுவன் கைது செய்யப்பட்ட நிலையில், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டான்.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் சிறுவனின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. மேலும் சிறுவனின் தந்தைதையையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் சிறுவனை காப்பாற்ற முயற்சித்ததாக அவனது தாத்தாவை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.