அமெரிக்காவில் லாங் ஐலாண்ட் நகரைச் சேர்ந்த ஜோர்டான் மரோட்டா என்ற 5 வயது சிறுவனுக்கு பயோனிக் ஆர்ம் எனப்படும் செயற்கை கை பொருத்தப்பட்டுள்ளது.
பொதுவாக வயதானவர்களுக்குதான் இதுபோன்ற பயோனிக் ஆர்ம் பொருத்தப்படுவது வழக்கம். ஆனால், ஜோர்டான் மரோட்டாவின் செயல்பாடுகள் நல்ல முதிர்ச்சியடைந்த நபரைப் போல இருப்பதால், அவரது தாயின் வேண்டுகோளுக்கு இணங்க பயோனிக் ஆர்மை பொருத்த மருத்துவர்கள் சம்மதித்தனர்.
செயற்கை கை பொருத்தப்பட்ட பின்னர், சட்டையை அயன் பண்ணுவது, கால் டாக்சியை அழைப்பது என பல்வேறு சேட்டைகளை ஜோர்டான் மரோட்டா செய்வதாக அவனது தாயார் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.