புதுச்சேரியில் கட்டிட ஒப்பந்ததாரர் வீட்டில் 2 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை திருடிய பணியாளரை போலீசார் கைது செய்தனர்.
சாரம் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தியாகராஜன். இவருக்கு சிறுநீரக பாதிப்பு உள்ள நிலையில் கமலேஷ் என்ற நபர் பணியாளராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் தியாகராஜனின் உறவினரான முத்துக்குமார் என்பவரது வீட்டிலிருந்த 2 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மாயமாகின.
இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் நகையை திருடியது கமலேஷ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து கமலேஷை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.