ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு போதை மாத்திரை மற்றும் கஞ்சா கடத்தும் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி தனிப்படை போலீசார் ரோந்து சென்றபோது, பஞ்சந்தாங்கி என்ற இடத்தில், இருவரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். அவர்கள் வந்த வாகனத்தை சோதனை செய்ததில், மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதற்கு துணையாக செயல்பட்ட முத்துப்புல்லாணி, ஸ்ரீதர், கனி, ஷேக் செய்யது, அப்துல்லா உள்ளிட்டோரை கைது செய்தனர்.
விசாரணையில், இந்த கும்பல் இலங்கைக்கு போதை மாத்திரை உள்ளிட்டவைகளை கடத்தி விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.