அம்பாசமுத்திரம் அகஸ்தியர் அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீராடி மகிழ்ந்தனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அகஸ்தியர் அருவி அமைந்துள்ளது.
இந்நிலையில், கோடை விடுமுறையை கொண்டாடும் விதத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
பின்னர், அவர்கள் அனவரும் அருவியில் நீராடி மகிழ்ந்தனர். முன்னதாக, அருவிக்கும் வேன், கார், பஸ் முதலிய வாகனங்களில் மது, புகையிலைப் பொருட்கள், சோப்பு, ஷாம்பு மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உள்ளதாக என வனத்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.