நாமக்கல்லில் அருகே பொன்விழா நகரில் அடுத்தடுத்த வீடுகளில் சுமார் 10 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொன்விழா நகரைச் சேர்ந்த லோக செந்தூர் குமரன், தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்து வருகின்றார்.
இவரும், இவரது குடும்பத்தினரும் வெளியூர் சென்றிருந்த நிலையில், அவரது வீட்டின் கதவை உடைத்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 9 சவரன் தங்க நகைகள், ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
மேலும், அதே தெருவில் வசித்து வரும் மருத்துவர் இன்பசேகரன் என்பவர் வீட்டிலும் ஒன்றரை சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பான, புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.