கன்னியாகுமரியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குழித்துறை சப்பாத்து பாலம் தண்ணீரில் மூழ்கியதால் பாலத்தை கடக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
ரீமால் புயல் காரணமாக குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வரும் நிலையில், முள்ளங்கானவிளை உள்ளிட்ட பகுதிகளில் மிக கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் அணைகளிலிருந்து தண்ணீர் வெளியேற்றபட்டு வருவதால் குழித்துறை தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.
இதனால் பொதுமக்கள் பாலத்தை கடக்க கூடாது எனவும், போக்குவரத்துக்கு தடை விதிப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.