சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரளா அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
அமராவதி அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான சிலந்தி ஆற்றைத் தடுத்து கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது.
இதனைக் கண்டிக்கும் விதமாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தமிழக – கேரளா எல்லை பகுதியான சின்னாறு சோதனைச் சாவடி பகுதியில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.