நெல்லை மாவட்டம் முக்கூடலில் திருமணம் முடிந்த கையோடு கிராம நிர்வாக அலுவலகத்தில் மரக்கன்றுகளை நட்ட புதுமணத் தம்பதிக்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
முக்கூடலில் ஜெயராஜ்- ஸ்வேதா தம்பதி திருமணம் இன்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, புதுமணத் தம்பதி வீட்டிற்கு கூட செல்லாமல் முக்கூடல் கிராம நிர்வாக அலுவலகம் சென்று இரண்டு புங்கை மரங்களை நட்டனர்.
திருமண விழாவில் ஆடம்பர செலவைத் தவிர்த்து மரக்கன்று நடுவது சுற்றுச்சூழலுக்கு நன்மையளிக்கும் என புதுமணத் தம்பதிகள் தெரிவித்தனர்.