கோடை விடுமுறை நிறைவடையவுள்ள நிலையில், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட பகுதிகளில் குளித்தும், மீன் உணவை சுவைத்தும் பரிசல் பயணம் மேற்கொண்டு சுற்றுலாவை இனிமையாக கொண்டாடினர். ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1,500 கன அடியாக உள்ளது.
















