கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழையால், விவசாய விளை நிலங்களில் வெள்ளத்தில் மிதந்து வருகிறது.
மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும், நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.
இந்நிலையில், தக்கலை, அழகிய மண்டபம், பள்ளியாடி, குளச்சல், மண்டைக்காடு மற்றும் திங்கள் நகர் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கன மழை பெய்தது.
இதன் காரணமாக, குளச்சல் மற்றும் பாம்பூரி வாய்க்காலில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில், பத்தறை பகுதியில் உள்ள 600 ஏக்கர் விவசாய விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்தனர்.