அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே டீசலை திருடியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கீழநத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கிராவல் குவாரிக்கு வந்த மர்மநபர்கள் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான டீசலை திருடிக் கொண்டு தப்பியோடினர்.
இதுதொடர்பாக போலீசாருக்கு புகார் வந்ததையெடுத்து ஜெயக்கொண்டத்தில், டீசல் கேன்களுடன் வந்த செல்வமணி, சஞ்சய், சத்தியமூர்த்தி, மணிகண்டன் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அப்போது 4 பேரும் டீசல் திருடியதைக் ஒப்புக்கொண்டனர்.