காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையடுத்து கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக அணைகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
தமிழகத்துக்கு 2 புள்ளி 5 டிஎம்சி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதையடுத்து, கிருஷ்ணகிரி சாகர், கபிணி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் 783 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.