ராகுல்காந்திக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் பாகிஸ்தான் தலைவர்கள் ஆதரவளிப்பது மிகத் தீவிரமான விஷயமென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மதுபானக் கொள்கை வழக்கில், ஜாமின் கிடைத்ததற்கு ஆதரவாக, பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சவுத்ரி ஃபவாத் ஹுசைன் கருத்து தெரிவித்தார்.
அதே போல், காங்கிரஸ் எம்பி ராகுல்காந்திக்கு ஆதரவாகவும் அவர் வீடியோ வெளியிட்டார். செய்தி நிறுவனம் ஒன்றிற்குப் பேட்டியளித்த பிரதமர் மோடியிடம் இவ்விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், இது மிகவும் தீவிரமான விஷயம் என்றும், இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறினார். நம் நாட்டின் மீது பகைமை கொண்டவர்கள் இங்குள்ள சிலருக்கு ஆதரவாகக் குரல் எழுப்புவது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்திய வாக்காளர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்படமாட்டார்கள் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.