ஓசூர் அருகே கள்ளத்தனமாக நாட்டு துப்பாக்கி தயார் செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கொடகரை கிராமத்தில் கள்ளத்தனமாக நாட்டு துப்பாக்கி தயார் செய்து விற்பனை செய்து வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில், அந்த பகுதிக்கு சென்று மல்லன் என்பவரை பிடித்து விசாரணை நடத்திய வனத்துறையினர், அவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் அவை தயாரிக்க வைத்திருந்த மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
வனத்துறையினர் புகாரின் பேரில், மல்லனை அஞ்செட்டி பாேலீசார் கைது செய்தனர்.