ஆவடி அருகே உறவினரை அடித்து கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் வாலிபர் ஒருவர் சரண் அடைந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில் பகுதியில் வசித்து வரும் குணசேகரன் என்பவருக்கும், அவரது உறவினரான கணேசன் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், குணசேகரன் வீட்டிற்கு சென்ற கணேசன் மீண்டும் சொத்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் குணசேகரனை கட்டையால் அடித்து கொலை செய்த கணேசன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதனை தொடர்ந்து கணேசனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.