ஒடிசாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
பாலசோர் மக்களவை தொகுதி வேட்பாளர் பிரதாப் சந்திர சாரங்கியை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
சாலைப் பேரணி நடத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிஜூ ஜனதா தளம் மாநில மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாகவும், இந்த முறை பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் அவர் கூறினார்.
நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்பார் என்றும் அவர் தெரிவித்தார் .