உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறக்க மத்திய அரசு அறிவுறுத்த கோரி, திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் மேல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மலைக்கோட்டை உச்சி டவரில் ஏறி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
அப்போது மேகதாதுவில் அணை கட்ட கூடாது என்பதை வலியுறுத்தியும், பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும் விவசாயிகள் முழக்கமிட்டனர்.