இந்தியாவை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ ஆப்பிரிக்காவில் தனது சேவையை தொடங்கவுள்ளது.
இதனையடுத்து பாரதி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு இடையே தென் ஆப்பிரிக்காவிலும் போட்டி இருக்கும் என கருதப்படுகிறது.
இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் குறைந்த விலை மொபைல் டேட்டா பயன்பாடு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு, அதை கானாவில் பிரதிபலிக்க ஆர்வமாக உள்ளதாக அந்நாட்டு தகவல் தொடர்பு தொடர்பு துறை அமைச்சர் உர்சுலா ஓவுசு தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆறு மாதங்களுக்குள் கானா முழுவதும் 5G சேவைகளைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து ஆப்பிரிக்காவின் பிற பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.