சென்னை எண்ணூர் தாழங்குப்பத்தை சேர்ந்த மீனவர் முகத்துவாரம் வழியாக கடலுக்கு மீன் பிடிக்க சென்றபோது படகு கவிழ்ந்து உயிரிழந்தார்.
தாழங்குப்பம் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் சக மீனவர்களுடன் கடலுக்குச் சென்றபோது பலத்த காற்று மற்றும் அலையின் சீற்றத்தால் படகு கவிழ்ந்து அங்கிருந்த கற்களின் மீது மோதி உயிரிழந்தார்.
மற்ற மூன்று மீனவர்களும் நீந்தி கரைக்கு வந்தனர். எண்ணூர் போலீசார் அரிகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த ஹரி கிருஷ்ணனுக்கு கமலா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.