ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சாலை பாலத்தை இணைக்கும் இரும்பு பிங்கர் பிளேட்டுகளை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்தப் பாலத்தை தினமும் நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்தி வரும் நிலையில், இதன் நடுவே இரண்டு சிமெண்ட் சிலாப்புகளை இணைக்கும் பிங்கர் பாயிண்ட் இரும்பு பிளேட்டுகளின் நட்டுகள் கழண்டு, இரும்பு பிளேட்டானது விலகி சேதமடைந்துள்ளது.
விபத்து ஏற்படுவதற்கு முன் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இதனை சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.