கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ராமகவுண்டனூரில் விவசாய தோட்டத்தில் புகுந்த காட்டு யானை பாகுபலியால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சமயபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட மின்வேலியால் தடம் மாறி சமயபுரம், ராமகவுண்டனூர், தாசம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்குள் யானை புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது.
குறிப்பாக ராமகவுண்டனூர் பகுதியில் விவசாய தோட்டத்தில் புகுந்து அங்குள்ள பயிர்களை நாசம் செய்தது.
மின்வேலியால் யானையின் வழித்தடம் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அதை அப்புறப்படுத்த வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதனிடையே, கோவை தொண்டாமுத்தூரை அடுத்த புதுப்பாளையம் பகுதியில் ஊருக்குள் புகுந்த பாகுபலி யானை, இருசக்கர வாகனத்தை தள்ளிவிட்டு செல்லும் காட்சி இணையத்தில் வைரலானது.