காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே தங்க நகைகளுக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்டவாக்கத்தைச் சேர்ந்த சுகுணா என்பவர், தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், சுகுணாவை கொலை செய்துவிட்டு, சுமார் ஆறு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க செயின், வளையல் உள்ளிட்டவற்றை கொள்ளை அடித்துச் சென்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாலாஜாபாத் போலீசார், உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சுகுணாவின் வீட்டின் கீழ்தளத்தில் வாடகைக்கு தங்கியுள்ள வட மாநிலத்தைச் சேர்ந்த 3 நபர்களிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.